அரிதாரிமங்கலத்தில் ரூ.30.7 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிட பூமி பூஜை

பூமி பூஜையில் பங்கேற்றவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட அரிதாரிமங்கலம் கிராமத்தில் இரண்டுவகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைசெய்துபெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசுகையில் எனது தொகுதிக்குட்பட்ட அரிதாரிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது இருப்பினும் இக்கட்டிடம் மிகவும் பழமையானதால் இடிந்து விழும் நிலையில் உள்ளது என அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்
இதனை ஏற்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக ரூ 30.7 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட பூஜைகள் போட்டு துவக்கி வைக்கப்படுகிறது. இப்பணிகள் காலதாமதம் செய்யாமல் முடித்திட வேண்டும்.
மேலும் இப்பகுதியில் பல் வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சிமெண்ட் சாலைகள் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர், கூடிய விரைவில் படிப்படியாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு தெருவிளக்குகள் பொருத்தப்படும் .மேலும் எனதுதொகுதி நிதியின் கீழ் நபார்டு திட்டத்தின் கீழ் இதுவரை40க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்களை மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கட்டிடம் பாதுகாப்பாக இருக்கும் பல்வேறு கிராமங்களில் மழை நீர்மேலே தேங்க விட்டு ஒழுகுறது என குறை சொல்கிறீர்கள், அது முற்றிலும் தவறு .நமது வீட்டை எப்படி பராமரிக்கிறோமோ அதே போல் அரசுகட்டிடங்களையும் பார்த்து கொண்டு பராமரியுங்கள்.இதுவும் நமது சொத்து தான்,நமது பிள்ளைகள் தான் படிக்கிறார்கள் என்ற எண்ணம்உங்களுக்கு வரவேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், ஆணையாளர் ஏ.எஸ். லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) நிர்மலா, ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சம்பத், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகன், ஒப்பந்ததாரர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி சுதாகர், ஏழுமலை மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
