ராயகிரியில் கிணறு அமைக்க பூமி பூஜை

ராயகிரியில் கிணறு அமைக்க பூமி பூஜை


ராயகிரியில் கிணறு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது


ராயகிரியில் கிணறு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சியில் ரூ, 2.49 கோடி மதிப்பீட்டில் மூலதன மானிய நிதி திட்டம் 2023-2024, குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் மூலம் திறந்த வெளிக் கிணறு, பம்பிங் ரூம், சம்ப் மற்றும் பம்பிங் லையன் அமைக்கப்படு கிறது. இப்பணிக்கான பூமி பூஜை நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். துணை தலைவர் குறிஞ்சி மகேஷ், நிர்வாக அலுவலர் சுதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பத்திரகாளி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் மகேந்திரன், ராஜகுரு, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலக பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story