ரூ.1.47 கோடியில் புறநோயாளிகள் பிரிவு கட்ட பூமி பூஜை
கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் புற நோயாளிகள் பிரிவின் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கதிரம்பட்டி ஊராட்சியில் அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து துவக்க விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 47 லட்சம் மதிப்பில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, சார் ஆட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், சுகாதார துணை இணை இயக்குனர் செந்தில்குமார், ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக நியாய விலை கடை கட்டிடம், பள்ளியின் கழிவறை கட்டிடம், மேல் நீர்தேக்க தொட்டி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர். கலைவாணி செல்வராஜி, மற்றும் திரளாக ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story