தார்சாலை அமைக்க பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு

தார்சாலை அமைக்க நடந்த பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்றார்.

. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க. பரமத்தி மேற்கு ஒன்றியம், தென்னிலை மேற்கு ஊராட்சியில், சின்ன வாங்கலாம் பாளையத்திலிருந்து சின்ன தோட்டம் புதூர் வரை, நபார்டு வங்கி உதவியுடன் 46 லட்சத்து 1-ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில் க. பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் நவீன் ராஜ், தென்னிலை மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுவர்ணலதா கார்த்திகேயன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story