ரூ 12.43 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை

ரூ 12.43 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை

பூமி பூஜை 

கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தி அரசு மேல்நிலை பள்ளி மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில்ரூ 12.43 கோடி மதிப்பில் 8 கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

கீழ்வேளுர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணி ரூ 66.63 லட்சத்திலும் கீழ்வேளுர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி ரூ 44.42 லட்சத்திலும், கிள்ளுக்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணி ரூ 66.63 லட்சத்திலும்,கலசம்பாடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணி ரூ 66.63 லட்சத்திலும், பெரியதும்பூர், அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு ரூ 66.63 லட்சத்திலும்,

குருக்கத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் பதினெட்டு வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிவறைகள் கட்டும் பணிக்கு ரூ 5.40 கோடியிலும், பால குறிச்சி, அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் பணிரெண்டு வகுப்பறை கட்டடம் மற்றும் கழிவறை கட்டும் பணிக்கு ரூ 2.78 கோடியிலும் சித்தாய்மூர் உயர்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டடம், ஆய்வகம் மற்றும் கழிவறை கட்டும் பணிக்கு ரூ 1.13 கோடி என 8 கட்டிடங்களுக்கு ரூ 12.43 கோடியில் கட்டிடங்கள் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானின் டாம் வர்சீஸ், நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலாபாபு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story