நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை

தர்மபுரி மாவட்ட, ஒட்டப்பட்டி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,மூக்கனூர் ஊராட்சி, ஒட்டப்பட்டி பகுதியில் ரூ.33.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 60,000.மற்றும்10,000. லிட்டர் OHT-மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நேற்று மாலை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அதிமுக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர்களிடம் விரைவாக பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் அதற்கான மாற்று வழியை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் துறை அதிகாரிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி அறிவுறுத்தினார்.

Tags

Next Story