புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 25.4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா - மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டி தர வேண்டும் என மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.. அந்த கோரிக்கையின் அடிப்படையில் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பணியை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்று புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பணியினை பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.. இதேபோன்று தீட்டாளம் மற்றும் கோழியாளம் ஆகிய கிராமங்களில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கலை அரங்கத்திற்கு 7.70லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கலையரங்கம்14.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணியை சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விவேகானந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story