பழனி அருகே பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை
பூமி பூஜை
பழனி அருகே பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சியில் உள்ள 200வீடுகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் 2கோடி ரூபாய் மதிப்பிலான சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நரிக்கல்பட்டியில் சுகாதார வளாகம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி கோட்டாட்சியர் சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story