ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை

ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை

பூமி பூஜை

அலங்காநல்லூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு வலசை கிராம சாத்தியார் அணை கால்வாயில் பழுதடைந்த மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட மூலதன மானிய திட்ட நிதி ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் வரவேற்றார். துணைத் தலைவர் சுவாமிநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், செயல் அலுவலர் ஜுலான் பானு, பேரூர் செயலாளர் ரகுபதி, முன்னாள் செயலாளர் ராஜேந்திரன், கிராம தலைவர் கருப்பணன் சேர்வை, முன்னாள் தலைவர் அழகு உமாதேவி, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இப்பகுதி கிராம பொதுமக்களின் சுமார் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று பழுதடைந்த பாலத்தை இடித்து புதிய பாடம் கட்ட நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏவிற்கு நன்றி தெரிவித்தனர். முடிவில் 14வது வார்டு கவுன்சிலர் பிரியா கார்த்திக் நன்றி கூறினார்.

Tags

Next Story