செங்கப்பள்ளியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை - அமைச்சர் துவக்கி வைப்பு
பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி பழனி கவுண்டன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் பழனிகவுண்டன்பாளையம் முதல் காங்கேயம்பாளையம் வரை தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ரூ. 9.52 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story