கேரள எல்லையில் இருமாநில போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், திருவனந்தபுரம் எஸ் பி கிரண் நாராயணன் ஆகியோர் தலைமையில் நேற்று தமிழக கேரள எல்லைகளில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும் தலை மறைவான குற்றவாளிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட காவல்துறை இணைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் மேற்கொள்ளவும், குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கடத்தல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் நகர உதவி காவல் கண்காணிப்பாளர் உமேஷ் கோயல், நெய்யாற்றின்கரை துணை கண்காணிப்பாளர் அம்மணி குட்டன், சிறப்பு குற்ற பிரிவு துணை கண்காணிப்பாளர் சக்கரியா மேத்யூ, குமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துணை கண்காணிப்பாளர்கள் உதயசூரியன் குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கெளதம் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.