சேலத்தில் சைக்கிள் திருடியவர் கைது

சேலத்தில் சைக்கிள் திருடியவர் கைது

சேலத்தில் சைக்கிள் திருடியவர் கைது

கன்னிகாபரமேஸ்வரி கோயிலின் அருகே சைக்கிளை திருடியவரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

சேலம் எருமாபாளையம் நல்லுகவுண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் சித்துராஜ் (45). இவர் இன்று காலை சைக்கிளில் கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு வந்தார். கோயில் அருகே சைக்கிளை நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு சென்றார்.

அப்போது ஒருவர் சித்துராஜின் சைக்கிளை திருடிச்செல்ல முயன்றார். இதைப்பார்த்த சித்துராஜ், சத்தம்போட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுபற்றி டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் எஸ்ஐ சம்பத்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், சைக்கிளை திருடியவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story