இரு பிரிவுகளாக செயல்படும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியால் அதிகரிக்கும் உட்கட்சி மோதல்

சக்கரவர்த்தி
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் தங்கள் கட்சி பெயரையும் கொடியையும் பயன்படுத்தி வருவதாக அவர் மீது புகார் தெரிவித்த மாநில மகளிர் அணி தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என்றும் அவர் மாநில பொதுச் செயலாளரே இல்லை என்றும் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி விளக்கம்.
இரு பிரிவுகளாக செயல்படும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியால் அதிகரிக்கும் உட்கட்சி மோதல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய அளவில் புதிய கமிட்டி அமைப்பதற்கான கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்று நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் தங்களை மாநில பொதுச்செயலாளராக அறிவிக்கபட்டதாக கூறி கதிரவன் தலைமையிலும் கர்ணன் தலைமையிலும் இரு பிரிவினர்களாக செயல்பட்டு வந்தனர்.
இதில் கதிரவன் தலைமையிலான அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் கர்ணன் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதத்தில் தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது.-
இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி அந்தக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் கதிரவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி நிகழ்ச்சியின் பேனர்கள் கிழிக்கப்பட்டும் போலீசார் உடன் வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் தற்போது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில மகளிர் அணி சார்பில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் ஆர் சக்கரவர்த்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம் என்றும் இதனால் கட்சியின் பெயரினையும், கொடியினையும் பயன்படுத்தக் கூடாது என்றும் பயன்படுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து விளக்கம் அளிக்க தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த எஸ்.ஆர் சக்கரவர்த்தி கூறும்போது தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் அறிவுறுத்தலின்படி மாநில பொதுச் செயலாளர் கர்ணன் செயல்பட்டு வருவதாகவும் ஆனால் கதிரவன் தன்னை மாநில பொதுச் செயலாளராக கூறிக்கொண்டு தன் சுயலாபத்திற்காக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார் இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் கர்ணனிடம் கூறிய போது கதிரவன் தேசிய தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அவர் நிர்வாகிகளை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை எனக் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக தேசிய பொதுச் செயலாளர் தேவராஜனிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார். மாநில பொதுச்செயலாளர் யார் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்குள் நடைபெறும் உட்கட்சி மோதலாலும் ஒரு பிரிவினர் அதிமுகவிற்கு தங்களது ஆதரவையும் மற்றொரு பிரிவின திமுக விற்கும் தங்களது ஆதரவுனின் தெரிவித்திருப்பதால் தொண்டர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
