தமிழகத்திற்கு பெரும் தலை குனிவு - முன்னாள் அமைச்சர் தங்கமணி

போதைப் பொருட்கள் கடத்துவதால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி திருச்செங்கோட்டில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பேசினார்.

திமுக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்தே சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு அடைந்து உள்ளத்தோடு தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக வரும்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும் போதை பொருட்கள் கடத்தலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டு உள்ளதற்கும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் நாமக்கல் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும்,கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் இரா முருகேசன், நகரச் செயலாளர் அங்கமுத்து, நகர அவைத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர் செல்லப்பன்,ஒன்றிய செயலாளர்கள் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர், எம் சி மோகன்,சக்திவேல், அணிமூர் மோகன், அண்ணா தொழிற்சங்கம் பழ,ராமலிங்கம், மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் தகவல் தொழில் நுட்பானியினர் இளைஞர் அணியினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story