பேயனூர் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி

பேயனூர் கிராமத்தில் கலை பிரதர்ஸ் இணைந்து நடத்தும் 15 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர் கிராமத்தில் கலை பிரதர்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் கபடி போட்டிக்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் குமரேசன் கொம்மம்பட்டு அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வகுமார், லட்சுமணன், வெங்கடேசன், பேயனூர் ஊர் கவுண்டர் சம்பத், தர்மகர்த்தா ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாநில கபடி வீரர் விதுரன், மாவட்ட கபடி சங்கத் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் நாள் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் முதல் பரிசாக 15,015, இரண்டாம் பரிசாக 10,015, மூன்றாம் பரிசாக 7,015 உள்பட 8 பரிசுகள் வழங்கப்படுகிறது. இது தவிர சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை பேயனூர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து உள்ளனர்.

Tags

Next Story