எடப்பாடியில் பெரிய ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம்எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சேலம் ஏற்காடு பகுதியிலிருந்து தொடங்கும் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள் நிரம்பி வருகிறது... அதன் ஒரு பகுதியாக எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து மலங்காடு பகுதியிலுள்ள வெள்ளூற்றுபெருமாள் கோவில் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிய ஏரியின் கரை மற்றும் தண்ணீர் நிரம்பி செல்லும் கழுங்கு வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போதிய பாதுகாப்பின்றி பொதுமக்கள் கடந்து செல்வதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பலகை அமைத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது .

Tags

Next Story