நாமக்கல் அருகே பைக் தடுமாறி விபத்து: ஒருவர் காயம்
காவல் நிலையம்
நாமக்கல் மாவட்டம், மோகனூர், ஓலப்பாளையம் அருகே உள்ள இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் வயது 38. இவர் மார்ச் 10ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். வெள்ளியணை, ஆசிரமம் ஸ்கூல் அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த அவரது மூத்த சகோதரர் கிரண் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சுசீந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.