பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இன்ஜினியர் உயிரிழப்பு
பைல் படம்
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சுண்டைக்கரை வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி இவருடைய மகன் நித்திஷ் செய்தி 21 என்ஜினியரான இவர் சென்னையில் உள்ள ஜ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் .சில நாட்களாக வீட்டுத் தங்கி இருந்து வேலை செய்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நித்திஷ் சென்றார் பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பவானிசாகர் காமராஜர் நகர் அருகே சென்ற போது நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நித்திஷ் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்