கார் மீது டூவீலர் மோதி விபத்து

கார் மீது டூவீலர் மோதி விபத்து

கோப்பு படம்

ரெட்டியப்பட்டியில் வேகமாக சென்ற கார் திடீரென பிரேக்கிட்டதால் டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, தவளைவீரன்பட்டி அருகே உள்ள பட்டயத்தார் களம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36). இவர் மே 19ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில், கரூர் மாவட்டம், பாலவிடுதியில் இருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ரெட்டியபட்டி பகுதியில் உள்ள அஜித் தோட்டம் அருகே வந்தபோது, இவரை முந்தி சென்ற டிஎன் 47 ஏ க்யூ 6000 என்ற எண் கொண்ட கார் ,எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென பிரேக் இட்டதால், கிருஷ்ணமூர்த்தியின் டூவீலர் காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு கால்களிலும் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை மீறி காரை ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags

Next Story