புவனகிரி அருகே பைக் எரிப்பு : போலீசார் விசாரணை

புவனகிரி அருகே பைக் எரிப்பு : போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை 

புவனகிரி அருகே பைக் எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மருதுார் அருகே தலைக்குளம் காளிக்கோவில் அருகில் மர்மமான முறையில் இருசக்கர வாகனம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மருதுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாாரணை நடத்தி வந்தனர். எரிக்கப்பட்ட வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரித்ததில் குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர் பெயரில் பதிவாகியுள்ளதும், கடனில் வாங்கிய வாகனத்திற்கு மாதத்தவனை கட்டாமல் இருந்த நிலையில் இருசக்கர வாகனம் எடுத்து சென்றுவிட்டதாக இருசக்கர வாகனம் வாங்கியவர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இருசக்கர வாகனம் எரித்தது யார், எதற்காக எரித்தனர் என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story