பைக் - கார் மோதல்: டாக்டர் பலி!

பைக் - கார் மோதல்: டாக்டர் பலி!

விராலிமலை

பைக் மீது கார் மோதிய விபத்தில் டாக்டர் பலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை: திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்தவர் ரமேஷ் (30). தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பைக்கில் விராலிமலைக்கு வந்தார். அப்போது எதிரே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ரமேஷ் ஒட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், டாக்டர் ரமேஷ், காரில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் மறை மலை நகரை சேர்ந்த லோகராஜ்(57), அவரது மகள்கள் சரண்யா (27), சித்ரா (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 4 பேரும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ரமேஷ் உயிரிழந்தார். இதுபற்றி விராலி மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story