பைக் -கார் மீது மோதி விபத்து: இளைஞர் படுகாயம்
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 49. இவர் ஆம்னி கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் 19ஆம் தேதி காலை 11:30 மணியளவில் கரூர்- திண்டுக்கல் சாலையில் காரை ஓட்டி வந்துள்ளார் செல்வம். அப்போது, வெள்ளியணை மாரியம்மன் கோவில் வளைவு அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர், பிச்சம்பட்டி அருகே உள்ள வெள்ளாள கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பிரகாசுக்கு தலையில் பலத்த காயம்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த செல்வம் வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பிரகாஷ் மீது நவம்பர் 20ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.