வெம்பாக்கம் அருகே லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 22). சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு பைக்கில் சென்றார்.
காஞ்சிபுரம் ராந்தம் சாலை வெங்கட்ராயன் பேட்டை தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. டிரைவர் லாரியை திடீரென பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது.அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.