கர்ப்பிணிப் பெண் மீது பைக் மோதல் - வாலிபர்களுக்கு தர்ம அடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த வாலிபர் வருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் பைக்கில் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். புத்தேரி நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் அமர்ந்து அதிவேகமாக தாறுமாறாக பைக்கை ஓட்டி வந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த வாலிபர்கள் வந்த பைக் கட்டுப்பட்டை இழந்து கணவன் மனைவி வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த கற்பிணி பெண் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த வாலிபர்கள் காயம் இன்றி தப்பினர் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் 12வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஸ்ரீ லிஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணி பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அந்த வாலிபர்கள் போலீசார் வருவதற்கு முன் அங்கிருந்து தப்பி ஓடினார். தற்போது இந்த வாலிபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.