பைக்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
நொய்யல்
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் வயது 42. இவர் மே 10-ம் தேதி மாலை 6 மணி அளவில், ஈரோடு - கரூர் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் நொய்யல், அண்ணாநகர் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, எதிர் திசையில், தென்காசி அல்கொண்டான் குளம், வடக்கு தெருவை சேர்ந்த சங்கர பாண்டியன் வயது 38 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டாரஸ் லாரி, தினகரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தினகரனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த தினகரன் தாயார் கண்ணம்மாள் வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சங்கர பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.