வேகத்தடையில் பைக் நிலை தடுமாறி விபத்து - மாற்றுதிறனாளி பலி

வேகத்தடையில் பைக் நிலை தடுமாறி விபத்து - மாற்றுதிறனாளி பலி
X

ஊனமுற்றவர்

இரணியல் அருகே வேகத்தடையில் பைக் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் மாற்றுதிறனாளி பலியனார்.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த கொன்னகுழிவிளை பகுதியைசே ர்ந்தவர் டார்வின் (41) மரவேலை செய்துவந்தார். இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 17.ம் தேதி தக்கலையிலிருந்து, இரணியல் நோக்கி பைக்கில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணாட்டு விளை அரசு பள்ளி முன்புள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி கிழே விழுந்ததில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் டார்வினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவ்வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை பின் டார்வின் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த டார்வின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து டார்வின் மனைவி அஜிதா (38) இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story