பைக் திருட்டு - போலி பத்திரிகையாளர் கைது
கைது செய்யயப்பட்ட இசக்கியப்பன்
குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்க்குட்பட்ட குருந்தன்கோடு மேம்பாலம் அருகில் நேற்று இரணியல் காவல்துறை ஆய்வாளர் பத்மாவதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனார். அப்போது அவ்வழியாக (PRESS) என்று எழுதபட்டிருந்த மோட்டார் பைக்கில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் நான் பத்திரிக்கை நிருபர் என்று முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து கொண்டிருந்தார்.
சந்தேகத்திற்கு இடமான அவரை போலீசார் இரணியல் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின் அவர் ஓட்டிவந்த பைக்கின் பதிவு எண் மற்றும் இஞ்சின், சேஸ் நம்பர்களை சோதனை செய்த போது அது போலியானவை என்று தெரியவந்தது. பின் போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் பைக்கை ஓட்டி வந்தவர் வடக்கன்குளம் தனக்கன்குளம் மாடசாமி மகன் இசக்கியப்பன் (வயது 33) என்றும் இவர் போலி பத்திக்கையாளர் என்பதும் தெரியவந்தது.
அதன் பின் அவர் ஓட்டி வந்த மோட்டார் பைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வில்லுக்குறி வெள்ளச்சி விளை பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கபட்டிருந்த சுரேஷ்குமார் (வயது 44) என்பவரது பைக்கை இசக்கியப்பன் திருடி சென்றதும் என தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து மோட்டார பைக்கை கைப்பற்றி கைது செய்து பின் தக்கலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திவிட்டு பின் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.