கருங்கல் அருகே அரசு பஸ் கண்டக்டரின் பைக் திருட்டு

X
கருங்கல் அருகே அரசு பஸ் கண்டக்டரின் பைக் திருட்டு.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சுரேஷ் (32) திங்கள்சந்தை அரசு பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த சுரேஷ் தனது வீட்டின் முன் பைக் நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். நேற்று காலையில் பார்த்த போது வீட்டு முன் நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. இவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவு 12 மணியளவில் பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் இவரது வீட்டருகே நோட்டமிட்டு உள்ளனர். ஒருவர் வந்து பைக் பூட்டப்பட்டுள்ளதா? என்று பார்த்து, பூட்டப்பட்டிருந்ததால் மூவரும் பைக்கில் கருங்கல் பாதையில் சென்றுள்ளனர். பின்னர் 10 நிமிடம் கழித்து இரண்டு பேர் மட்டும் திரும்பி வந்தனர். ஒருவர் பைக் ஸ்டார்ட் செய்த நிலையில் அமர்ந்திருக்க, மற்றொருவர் வந்து பைக் லாக்கை உடைத்து, வயரை துண்டித்து நேரடி இணைப்பு கொடுத்து பைக்கை திருடி கொண்டு கருங்கல் பாதையில் சென்றுள்ளனர். மூன்று பேரும் வாலிபர்கள். அவர்கள் முகத்தை மறைத்து துணி கட்டி இருந்தனர். இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள வேறு கேமராக்களில் திருடர்கள் பதிவாகி உள்ளனரா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
