கள்ளக்குறிச்சி அருகே பைக் திருட்டு ஆசாமி கைது

கள்ளக்குறிச்சி அருகே பைக் திருட்டு ஆசாமி கைது
X

மணிகண்டன்

கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று மாலை 4:00 மணியளவில் அரசு மருத்துவக் கல்லுாரி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், முடியனுார் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 34; என்பதும், அவர் வந்த பைக் திருடியது என்பதும் தெரியவந்தது. மேலும், 3ம் தேதி மற்றும் 15ம் தேதிமருத்துவக் கல்லுாரி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக்குளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story