அதிகரிக்கும் இருசக்கர வாகன திருட்டுகள்: அச்சத்தில் பொதுமக்கள்

அதிகரிக்கும் இருசக்கர வாகன திருட்டுகள்: அச்சத்தில் பொதுமக்கள்

கோவையில் வீட்டின் வெளியே நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.  

கோவையில் வீட்டின் வெளியே நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோவை:பி.என்.புதூர் பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார்(35) தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.நேற்று உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர் வாகனத்தை வெளியே நிறுத்தி வைத்துவிட்டு மீன்கள் வாங்க சென்றுள்ளர்.திரும்பி வந்த பார்த்தபோது இருசக்கர வாகனம் இல்லாதை கண்டு அதிர்ச்சி அடைந்து சுற்று வட்டார பகுதிகளில் தேடியவர் மர்ம நபர்கள் வாகனத்தை திருடி சென்றுள்ளதை அறிந்து இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைபுதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் லக்‌ஷ்மி மில்ஸ் பகுதியில் உள்ள லூலு மால் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வணிக வளாகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பதை அறிந்து பந்தய நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் இரத்தினபுரி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஹரி விக்னேஷ்(21) வீட்டின் முன் நிறுத்தபட்டிருந்த பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் சக்தி சாலை கணபதி புதூர் பகுதியில் அமைந்துள்ள மேன்ஷன் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மவுலீஸ்வரன்(22) என்பவரின் யமாஹா பைக் ஆகியன திருடப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக வீட்டின் வெளியே நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story