கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகன சுற்றுப்பயணம்

விருதுநகரில் உள்ள காமராஜ் பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் வருடந்தோறும் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஊர்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள அரசு, மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று காமராஜ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 15 கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்ட இரு சக்கர விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை கல்லூரியின் செயலாளர் தர்மராஜன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் விருதுநகர், உசிலம்பட்டி, தேனி,கம்பம், ஆகிய ஊர்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் சென்ற அவர்கள் செல்லும் வழியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்தும், இன்றைய சூழலில் குழந்தைகள் கல்வி கற்றால் தான் வாழ்க்கையில் உயர்ந்து அவரவர்களின் லட்சியத்தை அடைய முடியும் என்றும், கல்வியின் அவசியம் குறித்து பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். இன்று துவங்கிய இந்த விழிப்புணர்வு பயணம் வரும் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது.
