விருதுநகர் அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் காயம்

விருதுநகர் அருகே பைக்குகள் மோதல்:  ஒருவர் காயம்
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே மூளிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன மோதிய விபத்தில் மற்றொரு இரு சக்கர வாகனத்தை சேர்ந்த நபர் காயமடைந்தார்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டி விளக்கிலிருந்து சின்னப்பரெட்டியாபட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன மோதிய விபத்தில் மற்றொரு இரு சக்கர வாகனத்தை சேர்ந்த நபர் காயம விருதுநகர் செங்குன்றாபுரம் அருகே உள்ள சின்னப்ப ரெட்டியபட்டி பகுதியைச் சார்ந்தவர் ராம்குமார் வயது 27 இவருடைய தந்தை ராமராஜ்.ராம்குமார் விருதுநகரில் உள்ள தனியார் கடை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராம்குமார் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் முளிப்பட்டி விளக்கில் இருந்து சின்னப்ப ரெட்டியாபட்டி செல்லும் வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது விருதுநகர் அதே பகுதியைச் சார்ந்த திருப்பதி ராஜா என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ராம்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ராம்குமார் காயம் அடைந்த நிலையில் காயமடைந்த ராம்குமார் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய திருப்பதி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய ராம்குமாரின் தந்தை ராமராஜ் அளித்த புகார் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Read MoreRead Less
Next Story