பைக்குகள் நேருக்கு நேர் மோதல்- 2 பேர் பரிதாப பலி
விபத்தில் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அரும்பலுர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி[40] லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அவரது அண்ணன் வெங்கடேசன் என்பவரை தேவிகாபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏற்றி விட்டு மீண்டும் அரும்பலுர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தேவிகாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் கோட்டி[35] தனது உறவினர் பிரகாஷ் என்பவரை பைக்கில் ஏற்றி கொண்டு போளூரிலிருந்து தேவிகாபுரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போது முடையூர் அருகில் 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சுப்ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கோட்டி மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் தொடர்ந்து சிசிச்சை பெற்று வருகிறார். தீபாவளி தினத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிராகாஷ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags
Next Story