வேப்பனகள்ளி பேருந்து நிழல் கூடத்தை ஆக்கிரமித்த பைக்குகள்

பேருந்து நிறுத்ததை ஆக்கிரமித்த பைக்குகள்

வேப்பனப்பள்ளியில் பேருகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் குப்பம் ஜங்ஷன் சாலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிழல் கூடம் அமைக்கப்பட்டது.
இங்கிருந்து பேரிகை, பாகலூர், ஓசூர், கேஜிஎப், காமசமுத்திரம், கோலார், மாலூர், குப்பம், குடிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிக்கு தினமும் 100 கணக்கான பயணிகள் வந்து பேருந்திற்காக காத்திருந்து செல்கின்றனர்.
இந்த நிழல் கூடம் அமைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே பயணிகள் நிழல் கூடம் இருந்த நிலையில் பின்னர் அப்பகுதி வாகன ஓட்டிகளின் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் நிழல் கூடமாக மாறியது.
தற்போது பயணிகள் வந்து அமர முடியமால் நிழல் கூடத்தின் உள்ளேயே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் நிழல் கூடம் முன்பு கடைகள் அமைத்து ஆக்கிரமித்துக் கொள்வதால் நிழல் கூடம் முழுவதும் ஆக்கிரமிப்பாக மாறி உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் உள்ளே சென்று அமர முடியமால் சாலையில் கால்கெடுக்க நின்று கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கூட பயணிகள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளும் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற ஊராட்சி நிர்வகமும் எவ்வித நடவடிக்கை எடுக்கததால் நாளுக்கு நாள் அருகருகே ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றது.
உடனடியாக இந்த நிழல் கூடத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றி இருசக்கர வாகனங்களை அகற்றி நிழல் கூடத்தை பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


