சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் பைக்கால் காவலர்கள் அவதி
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
சிவகஙகை நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ரோந்து பணியின்போது நடைபெற்ற சோதனையில் உரிய ஆவனங்கள் இன்றி ஓட்டிவரப்பட்ட வாகனங்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இங்கு அவ்வளவு வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியும் மேற்கூரைகளும் இல்லாததால் இங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மழை மற்றும் வெயிலில் நின்று வீனாகி வருவதுடன் ஒன்றுடன் ஒன்று மேலே விழுந்து வாகனங்களின் பாகங்கள் சேதமாகிவருகிறது. இங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் ஆவனங்கள் சமர்பிக்கப்படாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களே அவை அனைத்தும் அன்மையில் வாங்கப்பட்ட வாகனஙகளாகவே உள்ள நிலையில் உரிமையாளர்கள் இதனை கண்டால் வருத்தத்திற்குள்ளாவார்கள்.
மேலும் இந்த வாகனங்கள் காவல் நிலையம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் போதுமான இடமின்றி காணப்படுவதுடன் புகாரளிக்க வருபவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தவும், பணிபுரியும் காவலர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தவும் வழி இன்றி தவித்து வருகின்றனர். எனவே வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.