இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.79.86 லட்சம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல இன்று கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் , 3 தற்காலிக உண்டியல் என மொத்தம் 14 உண்டியல்கள் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது

மேலும் விருதுநகர் கோவில் ஆணையர் செல்வி,கோவில் உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலையில் கோவில் அறங்காவலர்கள் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு கோவில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.79 லட்சத்து 86 ஆயிரத்து 858.178 கிராம் தங்கம், 572 கிராம் வெள்ளியும் கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story