ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையைக் கோவில் நிர்வாகம் எண்ணியதில் ஒரு கோடியே என்பத்து ஏழுலட்சத்து மூவாயிரத்தி என்னூற்று பதினாறு ரூபாய் பணம் கிடைத்துள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமநாதசுவாமி கோவில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றதைத் தொடர்ந்து உண்டியல்கள் நிறைந்தால் நேற்று காணிக்கைகள் எண்ணும் பணி கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கோவில் பணியாளர்கள் மூலம் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள், சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளதில், உண்டியல் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 87 லட்சத்து மூவாயிரத்து 816 ரூபாய் பணம், 106 கிராம் தங்கம், 12 கிலோ 075 கிராம் வெள்ளி, 274 வெளிநாட்டுப் பணம் கிடைத்துள்ளதாகக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story