பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.72 லட்சம்

பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.72 லட்சம்

பகவதியம்மன் 

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 13 லட்சத்து 72 ஆயிரத்து 200 காணிக்கையாக செலுத்தப்பட்டது தெரியவந்தது.
கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு கோயில் நிா்வாகம் சாா்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் ரத்னவேல்பாண்டியன் தலைமையில், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், உதவி ஆணையா் தங்கம் ஆகியோா் முன்னிலையில், ஆய்வாளா் சரஸ்வதி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளரும் பகவதியம்மன் கோயில் மேலாளருமான ஆனந்த், அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது. இப்பணியில் கோயில் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தினா் ஈடுபட்டனா். இதில், ரூ. 13 லட்சத்து 72 ஆயிரத்து 200 ரொக்கம், 17 கிராம் தங்கம், 306 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் காணிக்கையாக கிடைத்தன.

Tags

Next Story