உயிரியல் பன்முகத்தன்மை தேனி; பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு

உயிரியல் பன்முகத்தன்மை தேனி; பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு

சான்றிதழ் வழங்கல் 

உயிரியல் பன்முகத்தன்மை தேனி பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உயிரியல் பன்மஉயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாத்து, மேம்படுத்துவது அவசியம் என்றார் அரியலூர் மாவட்ட வன அலுவலர் டி.இளங்கோவன். உயிரியல் பன்முகத்தன்மை தினத்தையொட்டி, அரியலூர் பல்துறை அலுவலகத்திலுள்ள வன துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது,

இயற்கை வளங்களை பாதுகாப்பதில் வனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வனங்களின் பசுமைப் போர்வை தட்ப வெப்பநிலையை சீராக வைப்பதுடன் மழை பெய்ய முக்கிய காரணமாகவும் அமைகின்றது. உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காகவும்,

உலக சமுதாயத்தினரிடையே உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், ஆண்டுதோறும் மே 22 ஆம் தேதி சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது புறம் இருக்க காடுகள் மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படுவது தான் தற்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது. நமது சுற்றுச்சூழலியல் முறையில் வனப்பகுதி முக்கிய பங்கு வகிப்பதோடு, பூமியில் உயிர் வாழ்வதற்கும் இன்றியமையாத சேவையாற்றி வருகிறது. காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல்,

தொழில்மயமாக்கல் மற்றும் மாசு காரணமாக, மரங்கள் பெருமளவுக்கு அழிந்து விட்டன. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதன் மூலமாகவும் மரங்கள் பெருமளவு சேதமடைந்து, பெரும்பாலானோரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மனித இனம் உயிர் வாழ்வதற்கு உயிரியல் பன்முகத்தன்மை மிகவும் அவசியமானதாகும்.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும், உயிரியல் பன்முகத்தன்மையால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் நடைமுறைகளை சார்ந்தே உள்ளன. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும். எனவே நம்மால் இயன்ற அளவுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என்றார். பின்னர் அவர், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், வனச் சரக அலுவலர் முத்துமணி மற்றும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், வனத் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: உயிரியல் பன்முகத்தன்மை தினத்தையொட்டி, அரியலூர் பல்துறை அலுவலகத்திலுள்ள வன துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஓவியப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி ஒருவருக்கு சான்றிதழை வழங்கிய மாவட்ட வன அலுவலர் டி.இளங்கோவன்.

Tags

Next Story