வாசுதேவநல்லூரில் வியாசாகல்லூரியில் இருபெரும்விழா

வாசுதேவநல்லூரில் வியாசாகல்லூரியில் இருபெரும்விழா
X

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

வாசுதேவநல்லூரில் வியாசாகல்லூரியில் இருபெரும்விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் வாசுவேதநல்லூரை அடுத்து சுப்ரமணிய புரத்தில் இயங்கி வரும் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இன்று ஏழாவது ஆண்டுவிழா மற்றும் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவில் ஷோகோ டெக்னாலஜியின் நிறுவனர் மற்றும் சி. இ. ஒ ஸ்ரீதர்வேம்பு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார். ஸ்டார்ட் அப்- தென்காசி நிறுவனத் தலைவரும், மாற்றம் முன்னேற்றம் பவுண்டேசன் நிறுவனரு மான அ. ஆனந்தன் விழாவிற்கு தலைமை வகித்து சிறப்புரை வழங்கி, மாணவிகள் மற்றும் பேராசிரியப் பெருமக்க ளுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். மாணவியர் பேரவைத் தலைவி ஆயிஷா மஹீரா வரவேற்புரை வழங்கினார்.

வைஸ் சேர்மேன் பிரகாசவல்லி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி மாணவியர் தலைவி ஹர்ஸ்மிதா நன்றியுரை வழங்கினார். பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியருக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப் பட்டன. கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைத் வேந்தர் முனைவர் சந்திர சேகர் கலந்து கொண்டு 321 மாணவியருக்கு பட்டங்களும் பதக்கங்களும் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் கல்லூரி சேர்மேன் வெள்ளத்துரைப் பாண்டியன் முன்னிலை வகிக்க, நிர்வாக இயக்குநர் வெள்ளத்தாய் மற்றும் செகரட்டரி சுந்தர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story