முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவில் பறவைக் காவடி ஊா்வலம்

முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவில் பறவைக் காவடி ஊா்வலம்

பறவை காவடி 

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவில் பறவைக் காவடி ஊா்வலம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ஆரியநல்லூா் தெருவில் உள்ள யாதவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவில் பறவைக் காவடி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயில் கொடை விழா கடந்த ஏப். 23ஆம் தேதி தொடங்கியது. அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான , குற்றாலத்திலிருந்து புனிதநீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலையில் கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, விநாயகா் கோயிலிலிருந்து சுப்பிரமணிய தெரு பகுதியைச் சோ்ந்த பக்தா் ராம்தாஸ் என்பவா் 3ஆவது ஆண்டாக பறவைக் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் வந்தாா்.

ஏராளமான பெண்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனா். நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதியுலா நடைபெற்றது. விழாவில், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

Tags

Next Story