பறவைகள் கண்டறியும் பயிற்சி முகாம்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் ஈரநில பறவைகள் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
உலக ஈரநில தின பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பறவைகள் கண்டறியும் பயிற்சி முகாம் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. ஈரநில பகுதிகளின் உயிர்க்கோளத்தைப் பாதுகாக்க, மனிதகுல நல்வாழ்வை உறுதிப்படுத்த ஒருநாள் ஈர நில தின கருத்தரங்கம் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வனத்துறையுடன் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் ந.சந்திரகலா வரவேற்றார். தமிழ்நாடு வனத்துறையின் மேனாள் மாவட்ட வன அலுவலர் முனைவர் மா.செல்வம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார். வனச்சரக அலுவலர் க.ரஞ்சித், ஈர நிலத்தில் உயிரின செழுமை குறித்து விளக்க உரையாற்றினார். வனவர் தி.இளஞ்செழியன் பறவைகளை கண்டறியும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சியளித்தார். ஈர நிலம் தந்த இனிய அனுபவங்களை மாணவிகளுடன் சதீஸ், சத்யா, பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன் ஆகியோர் விளக்கினர். பேராசிரியர்கள் ராதா. மணிவண்ணன், நாசர், வாசுகி, கவிதா, கீதா லெடசுமி, ரெக்சி, பெரியநாயகி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக, பேராசிரியர் முனைவர் பெ.தங்கமதி நன்றி கூறினார். அறிவியல் கழக விழா ஒருங்கிணைப்பாளர்கள் பொ.பார்வதி, கோ.ஆர்த்தி, அ.அட்சயா க.அஷ்டலட்சுமி, து. சிந்துஜா, ரா.பொற்செல்வி, வ.பிருந்தா, சி. சிவப்பிரியா, ம.அபிநயா. உள்ளிட்ட மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.
Next Story