பெரம்பலூரில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு

பெரம்பலூரில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகளை கணக்கெடுக்கும் வனத்துறையினர்

பெரம்பலூரில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், துறைமங்கலம், அரும்பாவூர், கீழப்புலியூர், ஒகலூர் உள்ளிட்ட 14 பெரிய ஏரிகளில் ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

உயிரியல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் உள்நாட்டு அரியவகை பறவைகளான ஸ்விஃப்ட், ஸ்வால்லோ, கருப்பு ட்ராங்கோ மற்றும் வெளிநாட்டு வலசை பறவைகளான க்ரே ஹெரான், பர்ப்பில் மூர்ஹென், ஸ்நேக் பேர்ட், கார்கனி, ஓபன் பில்ஸ்ட்ரோக், ஸ்பாட் பில் டக் போன்ற பறவை இனங்கள் தென்பட்டதாக இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனப்பணியாளர்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனி குமரன், வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர், சமூக காடுகள் வனச்சரக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் இந்த கணக்கெடுக்கும் பணியை நடத்தினர்கள்.

Tags

Next Story