ஓசூரில் பறவை கணக்கெடுப்பு - 200 வகை பறவைகள் வலசை

ஒசூர் வனக்கோட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கடந்த 2 நாட்களாக நடந்த பறவைகள் கணக்கெடும் பணியில் 200க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து சென்றதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் உள்ள கேஆர்பி அணை, இராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி உள்ளிட்ட 25 நீர்நிலை, ஈரநிலங்களில் ஜனவரி 27,28 ஆகிய தேதிகளில் 50 வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவர்கள் மூலம் கேமரா, அதிநவீன தொலைநோக்கு கருவிகளை கொண்டு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, சிறிய காட்டு ஆந்தை, செந்நாரை,மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சல் மூக்கு நாரை உள்ளிட்ட 200க்கும் அதிகமான பறவை இனங்கள் அடையாளம் கண்டு, உரிய படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையான பறவைகள் டிசம்பர் மாதங்களில் ஒசூர் வனக்கோட்ட பகுதிகளுக்கு வலசை வருவதும் பிப்ரவரி மாதங்களில் குஞ்சு பொறித்து பராமரித்த பிறகு ஜூன் மாதம் வலசை கிளம்புவதும்,ஏரியில் மரங்கள் மற்றும் புதர் செடிகள் அதிகஅளவில் காணப்படுவதாலும்,சீரான சிதோஷன நிலை இருப்பதாலும் இவ்வகை பறவை இனங்கள் வாழ்வற்கு ஏற்ற சூழ்நிலை நிலை நிலவுவதால் 20 ஆண்டுகளாக இப்பறவை இனங்கள் வந்து செல்வது பறவைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Tags

Next Story