வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஆனந்த குளியல் போடும் பறவைகள்!

வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஆனந்த குளியல் போடும் பறவைகள்!

பறவை

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்க இருக்க கூடிய பறவைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் பறவைகள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கும் நீரில் வெயிலின் தாகம் தாங்க முடியாமல் ஆனந்த குளியலில் சந்தோசமாக குளித்து வருகின்றன.

கோவை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும் வெப்ப அலை வீசுவதாலும் பொதுமக்கள் முதல் உயிரினங்கள் வரை கோடை வெயிலால் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கோடை வெயிலையொட்டி வீட்டு மாடிகளில் நீரும்,உணவும் வைத்து பறவைகளின் பசி,தாகத்தை தீர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்நிலையில் கோவை மாநகர் பகுதியில் உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் இருந்து வருகிறது.

இங்கு பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு தொட்டியில் நீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்க இருக்க கூடிய பறவைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் பறவைகள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கின்றனர்.

பறவைகளும் பீச்சி அடிக்கும் நீரில் வெயிலின் தாகம் தாங்க முடியாமல் ஆனந்த குளியலில் சந்தோசமாக குளித்து வருகின்றன.

Tags

Read MoreRead Less
Next Story