விருதுநகரில் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரோசல் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு. க. அவர்களின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொது மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் , இணப்புகளையும் வழங்கி சிறப்பு செய்து வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் அருகே ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரோசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்வின் போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், முன்னாள் கவுன்சிலர்கள், சுரேஷ், ஹரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி இசக்கி, கிழை கழக செயலாளர் அறிவகம், சொக்கர், கண்ணன் , முத்து என கட்சி, நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story