முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் கொண்டாட்டம்

முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தேவர் ஜெயந்தி  

குமாரபாளையத்தில் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே சானார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடிவினா போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசாக புத்தகங்களை விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம், தீனா உள்பட பலர் வழங்கினர். இதில் ஆசிரியைகள் தேவிகா, நிருமா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story