மொரப்பூரில் முன்னாள் அமைச்சர் தலைமையில் கலைஞர் பிறந்த நாள் விழா

மொரப்பூரில் முன்னாள் அமைச்சர் தலைமையில் கலைஞர் பிறந்த நாள் விழா

கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

மொரப்பூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திமுக முன்னாள் தலைவரும் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன கலைஞர் கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி,தருமபுரி மேற்கு மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மொரப்பூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள,

கலைஞர் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் தலைமையில்,திமுக நிர்வாகிகளுடன் மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் கழக இந்நாள் முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story