முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினம்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இன்று 2.3.2024. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ,காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்,நகர மன்ற துணைத் தலைவர் அன்புச்செல்வன்,செங்கல்பட்டு நகரச் செயலாளர் நரேந்திரன்,மறைமலைநகர் நகர மன்ற தலைவர் சண்முகம்,வார்டு செயலாளர்கள், திமுக நிர்வாகிகள்,பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story