வெள்ளிமேடு பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

வெள்ளிமேடு பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள்விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கீழ்மாவிலங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசி, ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா வில், கீழ்மாவிலங்கையில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர். மேலும், வெள்ளிமேடு பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் காளி, மணி, வெள்ளிமேடு பேட்டை கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் வடசிறுவலூர் ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மேல்மாவிலங்கை பவளக் கண்ணன், மேல் சிவிரி ஸ்ரீதர், சுரேஷ், ஆத்திபாக்கம் சின்னத் தம்பி, மாரி, தங்கராஜ், தாதாபுரம் சத்யா உள்பட ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story